நோயாளிகள் அவதி

Update: 2024-09-29 13:23 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் மக்கள் பயன்பாட்டிற்காக ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளது.  இதனால் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த முதியோர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம்  ஆஸ்பத்திரிக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்