மரத்தை அகற்ற வேண்டும்

Update: 2024-09-29 12:31 GMT

 குலசேகரபுரம் ஊரில் துளுக்கன் குளம் அருகில் சாலையோரத்தில் இலவம்பஞ்சு மரம் பல ஆண்டுகளாக உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதியில் சேதமடைந்து காணப்படுவதுடன், கிளைகளும் அவ்வப்போது முறிந்து அந்த வழியாக செல்லும் மின்கம்பிகள் மீது விழுகின்றன. தொடர்ந்து மரக்கிளை முறிந்து விழுவதால், மின்கம்பி அறுந்து விழுந்து அந்நத வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் நிற்கும் மரத்தை வெட்டி அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், குலசேகரபுரம்.

மேலும் செய்திகள்