பொது சுகாதாரம் கட்டப்படுமா?

Update: 2024-09-29 11:52 GMT

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம், மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி ராஜலிங்கபுரத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் போதுமான அளவு தனிநபர் கழிப்பிட வசதி இல்லாததால், அருகிலுள்ள புதர் மண்டிய இடங்களுக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக பெண்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு புதர் பகுதியில் நடமாடும் விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ராஜலிங்கபுரம் பகுதியில் பொது சுகாதார கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்