பாளையங்கோட்டை அருகே நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே அரியகுளம் விலக்கு சாரதா மகளிர் கல்லூரி பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த விளக்கு பழுதாகி பல நாட்களாக ஒளிராமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்க மற்றும் சாலையை கடக்க போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்தில் சிக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உயர்கோபுர மின்விளக்கு ஒளிர்வதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?