ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2024-09-29 11:17 GMT
தூத்துக்குடி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஆறுமுகநேரி ரெயில் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே கேட் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் இந்த வழியாக சென்று வருகின்றனர். நெல்லை-திருச்செந்தூர் இடையே ரெயில்கள் செல்லும்போது ஆறுமுகநேரியில் ரெயில்வே கேட் அடைக்கப்படும்போது சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்