அம்பை பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம் கடந்த சில நாட்களாக பூட்டியே கிடக்கிறது. மேலும் பராமரிப்பற்று கிடப்பதால் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை திறந்து முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.