தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டியில் ரெயில்வே கேட்டின் இருபுறமும் வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று அஜ்மத் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு வெள்ளை வர்ணம் பூசப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.