கோண்டூர் ஜோதிநகரில் உள்ள அம்மா பூங்கா பராமரிப்பு இன்றி புதர் மண்டி காணப்பட்டது. இதனால் அந்த பூங்காவை சிறுவர்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த பூங்காவில் வளர்ந்து வந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.