பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் நக்கசேலம் பஞ்சாயத்துக்குட்பட்ட புது அம்மாபாளையம் கிராமத்தில் மின்மோட்டார் பழுதினால் மகளிர் சுகாதார வளாகம் ஒரு மாத காலமாக திறக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.