ராமநாதபுரம் நகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் அதிகமாக திரிகின்றன. இவை சாலையில் ஒன்றுக்கொன்று மோதி சண்டையிடுவதால் அவ்வழியே வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் அச்சப்படுகின்றனர். எனவே சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, அவற்றை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.