திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி தச்சூர் கூட்டு சாலை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே மழை நீர் வெளியேற 3 மாதங்களுக்கு முன்பே கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த கால்வாய் மூடப்படவில்லை. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.