திருவள்ளூர் மாவட்டம், நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் அந்த பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், சாலை ஓரங்களில் கால்வாய் பணிக்காக தோண்டிய பள்ளம் இருப்பதால், அந்த பகுதி வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி கால்வாய் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.