தூர்வார வேண்டும்

Update: 2024-09-22 09:06 GMT

வெள்ளிச்சந்தை ஊராட்சிக்கு உட்பட்ட மணவிளை பேயாட்டுக்குளம் உள்ளது. 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் தூர்வாரப்பட்டது. தொடர்ந்து முறையாக பராமரிக்காததால் தற்போது குளம் முழுவதும் பாசிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்