புதா்கள் அகற்றப்பட்டது

Update: 2024-09-22 08:59 GMT

நாகர்கோவில் ஒழுகினசேரியில் கே.என்.எஸ்.கே. அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடத்தின் பின்பகுதி புல், புதர்கள் மண்டி பாம்புகளின் வசிப்பிடமாக மாறி இருந்தது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வந்தனா். இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் ெசய்தி ெவளியிடப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தின் பின்பகுதியில் இருந்த புதர்களை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் மாணவ-மாணவிகள் நன்றியை தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்