சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு சென்றுவர மாணவர்கள் அரசு பஸ்சை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் சிலர் பஸ் படிக்கட்டுகளில் நின்றபடி ஆபத்தான முறைகளில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?