விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தூக்கமின்றி தவிக்கின்றனர். இந்த கொசுக்களால்டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.