கரூர் பெரிய குலத்துப்பாளையம் பகுதியில் அமராவதி ஆற்று பாசன வாய்க்கால் ஒன்று செல்கிறது. இந்த வாய்க்காலை சுற்றிலும் பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் பாசன வாய்க்கால் செல்லும் பகுதியான ஜாமியாநகர் பகுதியில் வாய்க்காலில் மூட்செடிகள் முளைத்து புதர் மண்டி மணல் திட்டுகளாக காட்சியளிப்பதுடன், அதில் கழிவுநீரும் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் வாய்க்காலின் பல்வேறு பகுதிகளில் நீர் செல்ல முடியாமல் தேங்கியும் உள்ளது. இதனால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.