செங்கோட்டை தாலுகா இலத்தூரில் இருந்து நெடுவயல் செல்லும் சாலையில் அனுமன் நதி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள வளைவு பகுதிகளில் சாலையின் இருபுறமும் புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்த புதர் செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?