கோபால்பட்டியில், பாறைப்பட்டி சாலையில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இங்கு மது வாங்குபவர்கள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகே உள்ள குளக்கரையில் சாலையோரம் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் பள்ளிக்கு வரும் மாணவிகள் பெரிதும் அவதியடைகின்றனர். மதுபான கடையை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.