அண்ணாகிராமம் ஒன்றியம் அக்கடவல்லி ஊராட்சியில் உள்ள தாமரைக்குளத்தை ஆக்கிரமித்து அதிக அளவில் ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளது. இதனால் குளத்தில் மழைநீரை அதிக அளவில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க ஆகாயத்தாமரைகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டியது அவசியம்.