புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் உள்ள முரட்டு பாசன வாய்க்கால் தூர்ந்துபோனதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்த செய்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து முரட்டு பாசன வாய்க்காலை அதிகாரிகள் தூர்வாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.