மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் கிராமிய சந்தை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காய்கறிகள் சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் சேமிப்பு கிடங்கை விவசாயிகள் பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை அதில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?