ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.பகுதியில் உள்ள கண்மாய்களில் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. இதனால் கண்மாயில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி கண்மாயில் முழுக்கொள்ளளவு நீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.