திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை ஏனம்பாக்கம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது. இந்த பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் ஏனம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் அரசு ஆரம்ப சுகாதார நிலையமானது, கடந்த ஒரு மாதமாக டாக்டர் இல்லாமல் இயங்கி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக டாக்டரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.