தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பாக இருந்த பஸ் நிறுத்த பயணிகள் நிழற்கூடம் சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்டது. மீண்டும் அந்த இடத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பஸ்சுக்காக வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனவே புதிய பஸ் நிறுத்த கட்டிடம் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.