பாளையங்கோட்டை 24-வது வார்டு ஜாமிஆ பள்ளிவாசல் தெருவில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இவைகள் தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், பெண்களை விரட்டி கடிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.