கரூர் மாவட்டம், மரவாபாளையத்தில் உள்ள கொடுமுடி -பரமத்தி வேலூர் நெடுஞ்சாலையில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்வதற்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரீட் சாலை போடப்பட்டது. இந்நிலையில் அந்த சாலை மிகவும் பழுதடைந்து சாலையின் இருபுறமும் ஏராளமான செடி, கொடிகள் முளைத்து சாலையை மறைத்துள்ளது.இதனால் அந்த வழியாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.