அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரோஸ்காம்பவுண்ட் பகுதியில் உச்சினிமாகாளி அம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஓடை சேதமடைந்து செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், மழைநீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால் ஓடையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வன், கன்னியாகுமரி.