சேலம் மெய்யனூர் ஆலமரக்காடு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் நடந்து செல்லும் குழந்தைகள், பெண்களை தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்து துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்துடனேயே செல்கின்றன. எனவே அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.