நெல்லை அருகே தருவை பஸ் நிறுத்தத்தில் குடிநீர் இணைப்புக்கு போடப்படும் ராட்சத குழாய் பயணிகளுக்கு இடையூறாக கிடக்கிறது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடைக்கு வெளியே நின்று பயணம் மேற்கொள்கின்றனர். பயணிகளுக்கு இடையூறாக உள்ள ராட்சத குழாயை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?