திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட ராணி மெய்யமணி நகர் இ.பி. காலனி சாய் நகர் மற்றும் அதன் பகுதியை சுற்றியுள்ள தெருக்களில் பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. பன்றிகளினால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.