பொதுமக்களை கடிக்கும் தொருநாய்கள்

Update: 2024-09-01 11:24 GMT

திருச்சி மாநகராட்சி 64 மற்றும் 65 வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர், உடையான்பட்டி, முல்லை நகர், சாய் நகர், ராணி மெய்யம்மை நகர் உள்பட அதை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் இப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்களை தெருநாய்கள் துரத்தி கடிப்பதனால் மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது தெருநாய்கள் மோதுவதால் அவர்கள் தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்