கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகபுரம் கிராமத்தின் அருகில் டாக்டர் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு கொட்டாரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து குளிப்பதற்காக மக்கள் வந்து செல்கின்றனர். குளத்தின் படித்துறைக்கு செல்லும் பாதையில் ஏராளமான கருவேல மரங்கள் உள்ளன. அங்கு விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால், படித்துறைக்கு மக்கள் பெரும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கருவேல மரங்களை வெட்டி அகற்றிட வேண்டும்.