சேலம் மாவட்டம் தலைவாசலில் தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான மக்களும், விவசாயிகளும் வந்து செல்கின்றனர். இந்த மார்க்கெட்டில் சிறிய அளவில் மழை பெய்தால் கூட மார்க்கெட் முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இந்த மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் முகம் சுளித்த படியே செல்கின்றனர். எனவே அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் நடடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாகீர், கெங்கவல்லி.