எரியோடு அருகே தங்கச்சியம்மாபட்டியில் கோவிலூர் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சுரங்கப்பாதைக்கான சுற்றுச்சுவர், தரைத்தளம் ஆகியவை அமைக்கப்பட்ட பிறகு அந்த பணிகள் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.