சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி காமராஜர் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் பாலம் கட்டும் வேலை நடைபெற்று வருகிறது. இப்பாதையில் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வேறு மாற்று பாதை இல்லாததால் அவ்வழியே செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் இப்பணியை விரைந்து முடித்து தர பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடக்கப்பட்டுள்ளது.