திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை, பேட்டைமேடு காலணியில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பலமுறை விபத்தில் சிக்குகின்றனர். மேலும் சாலையை கடந்து செல்லும் பொதுமக்களையும் முட்டுவதற்கு துரத்துவதால் பொதுமக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்னர்.