சென்னை சூளைமேடு, ஆத்ரேயபுரம் 2-வது தெருவில் கூவம் கால்வாய் உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக ஒரு தடுப்பு சுவர் உள்ளது. இந்த சுவர் சில நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இந்த சுவரை மீண்டும் கட்டி தர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர்கள் விளையாடும் போது, எதிர்பாராத விதமாக தவறி விழும் நிலை உள்ளது. எனவே ஆபத்தை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.