சென்னை வில்லிவாக்கம், செட்டித்தோப்பு தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் குடிநீர்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.