கீழப்பாவூர் அருகே மகிழ்வண்ணநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே 4 வழிச்சாலையில் மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.