தூத்துக்குடி தனசேகரன் நகர் 5-வது மேற்கு தெருவில் அதிகளவில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அப்பகுதியில் நடந்து செல்வோரை விரட்டி கடிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.