சிதம்பரம் நகரில் தெற்கு சன்னதி தெரு, காசு கடை தெரு, மேல வீதி நகர், பெரிய மார்க்கெட் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை கடிக்கப் பாய்கின்றன. எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.