விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் கிரமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிவதுடன் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் வெளியே வர அச்சமடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.