நோயாளிகள் அவதி

Update: 2024-08-18 13:46 GMT

பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு என சிகிச்சை அளிக்கும் வகையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த தனி பிரிவில் அமைக்கப்பட்டுள்ளார் குளிர்சாதன பெட்டிகள் (ஏசி) பழுதடைந்து உள்ளதால் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்