"தினத்தந்தி" புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-08-18 13:28 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், கீழபெரம்பலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதலாக 3 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர் என "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து கட்டிடத்தை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்