திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் கிராமத்தில் புறக்காவல் நிலையம் இருந்தது. அது தற்போது காவல் உதவி மையமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இங்கு போலீசார் தினந்தோறும் வருவதில்லை. இந்த நிலையில், இந்த காவல் உதவி மையத்திற்கு மின் கட்டணம் செலுத்தாததால் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த காவல் உதவி மையம் மின்சாரம் இல்லாமல் இருளில் ழூழ்கி காணப்படுகிறது. எனவே, இந்த காவல் நிலையத்தில் தினந்தோறும் போலீசார் வந்து பொதுமக்களின் குறைகளை கேட்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.