திருச்சி மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் புளியஞ்சோலை ஆற்றங்கரையின் அருகில் புகழ்பெற்ற மாசி பெரியண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வெளியூரில் இருந்து ஆண், பெண் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். ஆனால் இந்த பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால் பக்தர்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் கழிப்பிட வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.