சாலையை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள்

Update: 2024-08-18 11:30 GMT
வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் இருந்து ராமர் கோவில் செல்லும் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்