அருமனை பேரூராட்சி நெடியசாலை பகுதியில் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் பால்பண்ணை செயல்பட்டு வந்தது. தற்போது இந்த பகுதியில் பால்பண்ணை இல்லை, இந்த கட்டிடம் பயன்பாடற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், மாடுகள் வளர்ப்போர் பால்களை தாங்களே விற்பனை செய்யும் நிலைக்குள்ளாகி உள்ளனர். எனவே, பயன்பாடற்ற நிலையில் காணப்படும் கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டி பால்பண்ணை செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ்குமார், கும்பகோடு.