வடபொன்பரப்பியில் உள்ள வருவாய் ஆய்வாளர் கட்டிடம் திறக்கப்படாமல் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் குறித்த நேரத்தில் தேவையான சான்றிதழ்களை பெற முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பூட்டிக்கிடக்கும் வருவாய் ஆய்வாளர் கட்டிடத்தை உடனடியாக திறந்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.